பாராளுமன்ற பட்ஜெட் விவாதங்கள் ஒத்திவைப்பு
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவிருந்த குழுநிலை வரவு செலவுத் திட்ட விவாதங்களை நடத்த வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை ( 01) மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு வரையும் அமர்வுகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.
நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவிருந்த ஒத்திவைக்கப்பட்ட விவாதங்கள், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.00 மணி முதல் இரவு அமர்வு வரை நடைபெறும்.
