-அம்பாறை நிருபர்-
வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம் புரண்டு மூழ்கியதில் காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள கரைவாகுப்பற்று பொலிவேரியன் குடியேற்றப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
இதன் போது அனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த காரில் ஆண் பெண் சிறுமி என மூவர் பயணித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



