இலங்கையில் வேலையின்மை பற்றிய பிரதமரின் அறிவிப்பு

இலங்கையில் தற்போது 365,951 பேர் வேலையற்றவர்களாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், 2024 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் படை கணக்கெடுப்பு தகவல்களின்படி, நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதைக் குறிப்பிட்டார்.

வேலையற்ற தனிநபர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பிரதமர் வழங்கிய தகவல்கள் பின்வருமாறு.

சாதாரண தரத்திற்கு (G.C.E. O/L) குறைந்த கல்வித் தகுதியுடைய 103,308 பேர் வேலையற்றவர்களாக காணப்படுகின்றனர்.

அத்துடன் சாதாரண தரத்திற்கு(G.C.E. O/L) தகுதி பெற்ற 91,405 பேர் வேலையற்றவர்களாக காணப்படுகின்றனர்.

மேலும் உயர்தரத்திற்கு (G.C.E. A/L) தகுதி பெற்ற 128,984 பேர் வேலையற்றவர்களாக காணப்படுகின்றனர்.

பட்டம் அல்லது அதற்கும் மேற்பட்ட உயர் தகுதிகளைக்கொண்ட கல்வித் தகுதியுடைய 42,254 பேர் வேலையற்றவர்களாக காணப்படுவதா தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப 12,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் ஏற்கனவே தொழில் வாய்ப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.