தவெக.வில் இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன் : தமிழக அரசியலில் பரபரப்பு!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கோவையிலிருந்து சென்னைக்குச் சென்றுள்ள அவர், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் நாளையதினம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கோட்டையன் மட்டுமின்றி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக மூத்த தலைவரான 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தால், அது, அந்த கட்சிக்கு பெரும் பலமாக அமையும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.