சிம்பாப்வேயை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது இலங்கை!

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் மோதின.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்தநிலையில் 147 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிசங்க 98 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.