
கொழும்பு-பதுளை பிரதான வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடை
ஹல்துமுல்லை பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், கொழும்பு-பதுளை பிரதான வீதியுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
சரிந்து வீழ்ந்த மண்மேட்டை அகற்றி வீதியைச் சீர் செய்யும் பணிகள் ஆபத்தானதாக இருப்பதால், இந்தப் பணியை மேற்கொள்வதற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியை நாட வேண்டிய அவசியமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
