
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
எத்தியோப்பியாவிலுள்ள ஹேலி குப்பி எரிமலை 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக இன்று வெடித்து சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிமலையில் இருந்து பல கிலோ மீற்றர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
