
வெள்ளவத்தை திருட்டு சம்பவம் – இராணுவ அதிகாரி உள்ளிட்ட இருவர் விடுதலை
2001 ஆம் ஆண்டு வெள்ளவத்தை நகைக் கடையில் இருந்து தொலைபேசி திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இலங்கை இராணுவ அதிகாரி மற்றும் அவரது சாரதியை கொழும்பு உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
நீண்டகால விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க சட்டத்தரப்பு தவறியுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன் நம்பகத்தன்மை வாய்ந்த சாட்சிகள் இல்லை என்பதையும்,சாட்சியங்களின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்ததையும் நீதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது முதலில் சுமத்தப்பட்டிருந்த துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்னதாகவே மீளப் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
