மாவனெல்ல – ரம்புக்கனை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மாவனெல்ல – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 37 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது குழந்தை, பெண் உட்பட மூவர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.20 அளவில் மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதே தலகொல்ல பகுதியில் வைத்து மரம் சரிந்து வீழ்ந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை உட்பட நான்கு பேர் சிக்கியிருந்தனர். பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து அவர்களை மீட்டனர்.
மரம் வீழ்ந்த நிலையில் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
