போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கை

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பொலிசாரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருள் கட்டுப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக வர்த்தகர்கள் ,முச்சக்கரவண்டி சாரதிகள், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்களுக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீமினால் இன்று ஞாயிற்றக்கிழமை தெளிவூட்டப்பட்டது.

அத்துடன் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன் க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் பேருந்து நிலையத்தில் பொலிசாரால் சிரமதானப்பணியும் முன்னெடுக்கப்பட்டது.