
பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி – நாமல்
நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பேரணியையடுத்து பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்க பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய பேரணியில் கலந்து கொண்ட தரப்பினருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் தனது பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
பொய்களை உரைத்து, வேலை செய்யத் தெரியாத திசைகாட்டி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் தைரியம் உள்ளதாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

