சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வீடு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது, இந்த நிலையில் நேற்றிரவு கட்டைக்காடு பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த சூறாவளி காற்றில் சிக்கி வீடு ஒன்று சேதமடைந்துள்ளது, இவ்வாறு சேதமடைந்த வீடு பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பத்தினருடையதென்று தெரிவிக்கப்படுகின்றது

இராணுவத்தால் சில வருடங்களுக்கு முன்பு பெண் தலைமைத்துவம் கொண்ட இந்த குடும்பத்திற்கு வீடு அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.