எமிரேட்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது .
நேற்று (20) இரவு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயணி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
A380 வகை விமானம் நேற்று இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் மீண்டும் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டது .
