ரீல்ஸ் மோகத்தில் நடந்த விபரீதம்

இந்தியா- சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை காணொளியாக பதிவு செய்து பின்னணி இசையுடன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையான அவர், தனது நண்பரை காணொளி எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில், ரீல்ஸ் காணொளி பதிவிட்ட பரத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், காணொளியை எடுத்த 17 வயது சிறுவனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதான பரத் என்பவர் மீது ஏற்கனவே வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.