
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: ஒருவர் பலி – 11 பேர் காயம்
தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கு மேலாக மோதல் நடைபெற்றது.
காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததால், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அதன்பின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினோம்.
இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இதேவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் இல்லை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
