நானுஓயா வரை மலையக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை – கொழும்பு இரவு நேர தபால் ரயில் தடம்புரண்டுள்ளது.

இதல்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய ரயில் மார்க்கத்தில், மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.