
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சந்தேகம்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்கு பின்னர், அவரால் உடனடியாக விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்றும், ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
