மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாடி சோதனையில் சீனா வெற்றி

உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாடியை சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது. சீனா பவர் இன்ஜினியரிங் கோர்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்த காற்றாடி, 5,000 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய காற்றாடி ஆகும்.

ஒரு கால்பந்து மைதானத்தின் பாதி அளவுள்ள இந்த காற்றாடி, சீனாவின் வடக்கு மங்கோலியாவில் நேற்று இயக்கப்பட்டது.

இந்த காற்றாடி, மின்சாரம் தயாரிக்க 300 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் ஆற்றலையை பயன்படுத்துகிறது.

இந்த காற்றாடிக்கு கூடுதலாக, 1,200 சதுர மீற்றர் அளவிலான இரண்டு சிறிய காற்றாடிகளை வெற்றிகரமாக ஏவுவதும், கட்டுப்படுத்தப்பட்டு திரும்புவதும் இந்த திட்டத்தின் ஒரு முக்கியமான தொழில்நுட்ப மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இந்த காற்றாடி நில பயன்பாட்டை 95% குறைத்து 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது, ஒரு வருடத்திற்கு 10,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.