விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலிகளின் நிலை

சீனாவின் ஷென்சோ-20 (Shenzhou-20) பயணத்தின் போது டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நான்கு எலிகள், 14 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நுண் ஈர்ப்பு விசை மற்றும் வரையறுக்கப்பட்ட சூழல்கள் விலங்குகளின் நடத்தையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த நான்கு எலிகளும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

பூமிக்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட பிறகு, ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் நடத்தையை கண்காணித்து, அவற்றின் முக்கிய உடலியல் மற்றும் உயிர்வேதியியல் குறிகாட்டிகளை சோதித்தனர்.

இந்த நான்கு எலிகளும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முதல் பாலூட்டிகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.