-மஸ்கெலியா நிருபர்-
ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா ஹப்புகஸ்தனை தோட்ட பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுமார் 200 அடி உயரம் கொண்ட 4 மரங்கள் உள்ளன.
இந்த மரங்களால் எந்த நேரத்திலும் பாரிய உயிர் சேதங்கள் ஏற்படும், அந்த பகுதியில் உள்ள ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் பாதிக்கபடும் அபாயம் உள்ளது.
இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் மஸ்கெலியா பிரதேச சபை நோர்வூட் பிரதேச செயலாளர் இப் பகுதிக்கு பொறுப்பான அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் பலன் இல்லை என்று அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் விசனம் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி உடன் அப் பகுதியில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

