
ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவிப்பு
ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆலோசனை பிரகாரம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தமானி இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தால் , ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய ஒரே நாடு என்ற பெருமையினை இலங்கை பெற்றுள்ளது.

