
நண்பகலின் பின் மீண்டும் அதிகரித்த தங்க விலை!
இன்று நண்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 336,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், பிற்பகலுக்கு பின் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று மாத்திரம் 14,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 314,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
