காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் வயிற்றுப் பகுதியால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார்.

இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன.

ஒரு குழந்தையின் எடை 2 கிலோ 200 கிராம் எனவும், மொத்தமாக இரண்டு குழந்தைகளும் 4 கிலோ 400 கிராம் எடையுடன் ஆரோக்கியமாகப் பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வயிற்றுப் பகுதியால் ஒன்றிணைந்துள்ள இந்தக் குழந்தைகளைப் பிரிக்கும் சத்திரசிகிச்சை மூன்று மாதங்களுக்குப் பிறகு சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.

காசல் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளின் பிறப்புகள் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ள போதிலும், அண்மைக் காலத்தில் இவ்வாறானதொரு குழந்தை பிறப்பு இடம்பெற்றது இதுவே முதல் சந்தர்ப்பம் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.