சிறுவர் நல பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு இன்று

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் சிறுவர்களுக்கான பிரதேச சபை தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் சமூக சிற்பிகள் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டின் ஊடாக பத்தனை , டிரேட்டன் மற்றும் மவுண்ட்வார்ணன் பகுதிகளில் உள்ள 11 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சிறுவர் நல பிரதேச சபை என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் சிறுவர் நல பிரதேச சபை தலைவர், உப தலைவர் போன்றோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதேச சபையின் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் சிறுவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் ,பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சமூக சிற்பிகள் அறக்கட்டளை நிறுவனத்தின் கிளை முகாமையாளர் ஜெயராஜ் , ஹட்டன் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணி எஸ்.லலிதா மற்றும் சமூக சிற்பிகள் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஈஸ்வரி , பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.