மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பொதுநூலகவாசகர் வட்டத்தின் தலைவர் புருஷோத்மன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்,பிரதேச சபை செயலாளர் சு.சுபராஜ், கோட்டைக்கல்லாறு வட்டார பிரதேச சபை உறுப்பினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் பிரதி நிதிகள், பொது நிர்வாக அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவர்களின் பல்வேறு கண்கவர் நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன.





