
பிளெஸ்ஸிங் முசரபானி விலகல்
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி (Blessing Muzarabani) விலகியுள்ளார். கல்
காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவருக்குப் பதிலாக நியூமன் நியாம்ஹூரி (Newman Nyamhuri) அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதன்படி குறித்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
