
இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த 11 வயது சிறுவன்!
பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத் தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர 3ஆம் இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார்.
டாவி சமரவீர , கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி மாணவராவார். சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தினால் உத்தியோகபூர்வ தரவரிசை பட்டியல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இத்தாலியின் லிஞ்ஞானோ சபியடோரோ, பெல்லா இத்தாலியா EFA விலேஜ் ஸ்போர்ட்ஸ் மண்டபத்தில் நவம்பர் 3ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரை நடைபெற்ற 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட போட்டியில் டாவி சமரவீசர சம்பியன் பட்டத்தை சூடி தரவரிசையில் பெரு முன்னேற்றம் அடைந்தார்.
