சூரிச் – விமான நிலையத்தில் மோப்ப நாய் ஹஷிஷைக் கண்டுபிடித்தது

சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தில், சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் (BAZG) சுங்க அதிகாரிகள், நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட விமானப் பொதியில்; 128 கிலோகிராம் ஹாஷிஷை பறிமுதல் செய்தனர்.

சூரிச் விமான நிலையத்தில் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை மோப்ப நாயின் உதவியோடு ஆய்வு செய்தபோது, சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் (BAZG) ஊழியர்கள் 128 கிலோகிராம் ஹாஷிஷைக் கண்டுபிடித்தனர்.

சந்தேகத்திற்கிடமான 144 “நீர்ப்புகா லெமினட் தரை” பெட்டிகளில் பெட்டிகளில் இந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த ஆய்வின் போது, சுமார் 30 பெட்டிகளில் ஹாஷிஷ் கண்டுபிடிக்கப்பட்டது. பெட்டிகளில் விநியோகிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 128 கிலோகிராம்.

மேலதிக விசாரணைகளை சூரிச் மாநில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.