மாகாண கிராமிய அபிவிருத்தி கண்காட்சி
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்த “Rural Rise 2025” எனும் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாறை கல்முனை பாத்திமா மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாகாணத்திலுள்ள கிராமிய தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி கற்றுவரும் மற்றும் கற்று முடித்த சுயதொழில் முயற்சியான்மையாளர்கள் தமது தயாரிப்புகளை இந்நிகழ்வில் காட்சிப்படுத்தினர்.
அத்துடன், கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நடவடிக்கைகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் கிராம அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், பயிற்சி பெற்ற சுயதொழிலாளர்களுக்கு உபகரணங்களும் இயந்திரங்களும் ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், கிழக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



