கலசார மண்டபம் திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்-

அம்பாறை ,கல்முனை மாநகர சபையால் “பிரதேச அபிவிருத்தி உதவி திட்டத்தின்” கீழ் ரூபா 65 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கலாச்சார மண்டபம் கடந்த ஞாயயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம் பாவா, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர், மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர், கிழக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.