கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப் போட்டிகள்!

புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் கலாமித்ரா -2026 விருது வழங்கும் விழாவை முன்னிட்டு மகளிர்க்கான கலைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இப்போட்டிகளை ஏற்பாடு செய்கின்றது.

போட்டிகள்

1. மருதாணி அலங்காரம் :
பங்குபற்றுனர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. சித்திரம் வரைதல் :

ஒவ்வொரு பங்குபற்றுனரும் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

3. மேலைத்தேய குழு நடனம் :-
ஒவ்வொரு பங்குபற்றுனரும் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குழுவில் 3 முதல் 6 போட்டியாளர்கள் பங்குபற்றலாம்.

பொது நிபந்தனைகள்
ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

  • வழங்கப்படும் நேரத்திற்குள் தமது திறமைகளை போட்டியாளர்கள் வெளிக்காட்ட வேண்டும்.
  • சித்திரப் போட்டிக்கான தலைப்புகள் போட்டி தினத்தன்று உடனடி தலைப்புகளாக வழங்கப்படும்.
  • மருதாணி அலங்காரப் போட்டியிலும் சித்திரப் போட்டியிலும் பங்குபற்ற விரும்புவோர் தங்களுக்கு தேவையான உபகரணங்களை தாமே கொண்டு வரவேண்டும்.
  • சித்திரப் படைப்புகள் A4 கடதாசியிலேயே வரையப்படல் வேண்டும்.

போட்டியில் பங்குபற்றுவதை உறுதிப்படுத்துவதற்கு போட்டியாளர்கள் கீழே தரப்பட்டுள்ளன விடயங்களை தரப்பட்டுள்ள வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  1. விண்ணப்பதாரரின் பெயர்
  2.  வயது
  3.  பங்குபற்றும் போட்டி
  4.  நிரந்தர முகவரி
  5.  தொலைபேசி /வாட்ஸ்அப் இலக்கங்கள்
  6. மின்னஞ்சல் முகவரி

வட்ஸ்அப் இலக்கம்.
076 364 6000

சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி: 15 டிசம்பர் 2025. போட்டிகள் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப் படும்

மதிப்பீடு மற்றும் விருதுகள்
அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.

வெற்றியாளர்களுக்கான விருதும் சான்றிதழ்களும் 2026 ஜனவரி 30 இல் நடைபெறவிருக்கும் எமது விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

மேவதிக தகவல்களைப் பெற,

புதிய அலை கலை வட்டம்
மகளிர் அணி தலைவி
திருமதி. ரஞ்சனி சுரேஷ்
076 364 6000 தொடர்பு கொள்ளலாம்