அங்குராப்பண நிகழ்வு
கிழக்கு மாகாண, அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சாளம்பைக்கேணி -04 ஹிஜ்ரா வீதியின் 2ம் குறுக்கு புனரமைப்பு பணிகள் நாவிதன்வெளிப் பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சாளம்பைக்கேணி -04 ஹிஜ்ரா வீதியின் 2ம் குறுக்கு வீதிக்கு கொங்ரீட் இடும் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான மு.பா.நவாஸ் , மு.அ. நளீர் ஆகியோருடன் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சு.ரஞ்சித் குமார் மற்றும் பிரதேச வாசிகளும் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
02 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் இவ் வீதிக்கான கொந்தாரத்து ஒப்பந்த வேலைகள் அல்- உலூம் சனசமூக நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. நீண்ட நாட்களாக சேதமுற்று பாவனைக்கு பொருத்தமற்றதாக காணப்பட்ட இவ்வீதியானது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அபிவிருத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

