உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி உயிரிழந்தமைக்கான காரணம்

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதினால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தம்புள்ளை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
நேற்று தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது குறித்த மாணவி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

அவர் விஷம் அருந்தி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவி, இரவு உறங்கிய பின்னர் காலை கண்விழிக்காத காரணத்தினால் பெற்றோர் அவரைப் பரிசோதித்தபோது, அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் குறித்த மாணவியை தம்புள்ளை ஆதார மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், அவர் அதற்கு முன்னரே குறித்த மாணவி உயிரிழந்திருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.