ஹைக்கூ கவியரங்கம்

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வரும் ஹைக்கூ கவியரங்கம் இம்முறை பயிற்சி களமாக பரிணமித்து பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

புதிய அலை கலை வட்டத்தின் உதவி செயலாளரும் கணித பாட ஆசிரியரும் நூலாசிரியருமான சித்திரவேல் சுந்தரேஸ்வரன் இந்த அமர்வுக்கு கவித் தலைமை ஏற்றிருந்தார்.

கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடை பெற்ற இந்நிகழ்வினில் அனைத்து வயதினரும் கலந்துகொண்டனர். பிரபல பொருளியல் ஆசிரியரும் கவிஞருமான உதயன் (இனியவன்) ஹைக்கூ கவிதை குறித்த பயிற்சிகளை வழங்கினார்.