வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை மாலை முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
