எதிர்க்கட்சிகளின் கூட்டணி பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது -விமல் வீரவன்ச
எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறுகின்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல காரணிகளைக் கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
இதேநேரம் பேரணியில் பங்கேற்கப்போவதில்லை என சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் தெரிவித்துள்ளது
