வாகனங்களுக்கான லீசிங் வீதத்தில் திருத்தம்
வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான வீதங்களை திருத்தம் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 50% ஆகவும் திருத்தம் செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், இலங்கை மத்திய வங்கி குத்தகை வசதிகளுக்கான கடன் வீதங்களை வணிக வாகனங்களுக்கு 80%, தனியார் வாகனங்களுக்கு 60%, முச்சக்கர வண்டிகளுக்கு 50%, மற்றும் ஏனைய வாகனங்களுக்கு 70% எனவும் அறிவித்திருந்தது.
எனினும், கடந்த ஜூலை மாதம் நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட கடன் வீதங்கள், தற்போது இரண்டு பிரிவுகளின் கீழ் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
அதில், ஒரு பிரிவை வணிக வாகனங்கள் என்றும், ஏனைய பிரிவை கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்றும் மத்திய வங்கி பிரித்துள்ளது.
