ஈலோன் மஸ்க்கின் சம்பளம் ஒரு ரில்லியன் டொலர்!

ஈலோன் மஸ்க்கின் சம்பள உயர்வால் டெஸ்லாவின் பங்குகள் ஒரு சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஈலோன் மஸ்க் தனக்கு ஒரு ரில்லியன் டொலர் சம்பளம் வேண்டும் என்று டெஸ்லா பங்கு தாரர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து டெக்சாசின் ஆஸ்டின் நகரில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ஈலோன் மஸ்க் சம்பள விவகாரம் தொடர்பாக வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் டெஸ்லாவில் ஈலோன் மஸ்க்கை தக்க வைத்திருப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் வெளியேறினால் நிறுவனத்தின் பங்கு விலை கடும் வீழ்ச்சி அடையும் என்றும் அதன் தலைவர் ராபின் டென்ஹோம் தெரிவித்தார்.

இதனால் ஈலோன் மஸ்க் சம்பள விவகாரத்தில் ஆதரவு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கூட்டத்தின் முடிவில் அவர் கோரியிருந்த சம்பளத்தை வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்கு தாரர்கள் ஒப்புதல் அளித்தனர்.

மொத்தம் உள்ள பங்குதாரர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.