மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரித்விராஜ்

 

பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்டமான திரைப்படமொன்றை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இப்படத்தில் மலையாள மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிக்கிறார் என்று ஏற்கனவே படக்குழு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் மகேஷ் பாபுக்கு எதிராக வில்லன் வேடத்தில் கும்பா கேரக்டரில் நடிப்பார் என படக்குழு அறிவித்துள்ளது.