வாகரையில் விபத்து
வாகரை பனிச்சங்கேர்ணி பாலத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அதி காலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது காத்தான்குடியில் இருந்து வந்து ஒட்டமாவடியில் தனது சகோதரனையும், தனது மோட்டார் பைசிக்களில் ஏற்றிக் கொண்டு திருகோணமலையை நோக்கி சென்ற செய்யது முஹம்மது நாகூர் பிச்சை ஹாஜியார் வயது (65) என்பவரே எதிர் பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்தள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயப்பட்ட சகோதரர் தற்போது வாகரை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற் கொண்டுள்ளனர்.
