உப தவிசாளர் ஒருவரின் சகோதரர் போதை பொருளுடன் கைது!

-யாழ் நிருபர்-

நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த, பிரதேச சபை ஒன்றின் உப தவிசாளரின் சகோதரர், போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால், கோண்டாவில் பகுதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.