மதிய உணவை வீதியில் அமர்ந்து சாப்பிட்டவாறு தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், மதிய உணவை வீதியில் அமர்ந்து சாப்பிட்டவாறு, சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் சத்தியாக்கிரக போராட்டமானது, நேற்று செவ்வாய்க்கிழமை 49 ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடருகின்றது.

தங்களது விவசாய நிலத்தை அபகரித்து, தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் உற்பத்திக்காக வழங்கப்பட்டதாக தெரிவித்து, குறித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதமர் அலுவலகம் வரை போராட்டங்களை நடாத்தியும், உரிய காலப் பகுதிக்குள் தீர்வை தருவதாக பிரதமர் கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவுமில்லை, பிரதமரால் வழங்கிய கால அவகாசகமும் முடிவுற்றுள்ளது, என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம், விவசாயிகளை இவ்வாறாக வழி நடாத்துவது தங்களுக்கு கவலையளிப்பதாக தெரிவித்த முத்து நகர் விவசாயிகள், அபகரிக்கப்பட்ட விவசாய நிலத்தை வீதியில் இறங்கி மீண்டும் போராடாத வண்ணம் மீளபெற்றுத் தாருங்கள், என கோரிக்கை விடுக்கின்றனர்.