தேயிலை கொழுந்து அரைத்து கொண்டிருந்த இயந்திரத்தில் விழுந்த தொழிலாளி தலை சிதறி உயிரிழப்பு!

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தொழிற்சாலை இயந்திர சில்லில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பிளான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா மவுசாகலை தோட்டத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மவுசாகலை தோட்டப் பிரிவை சேர்ந்த நான்கு பிள்ளைகளில் தந்தையான விஜயகுமார் (வயது 50) என்பவராவார்

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.00மணியளவில் கொழுந்து அரைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சரியாக அதிகாலை 1.30 மணியளவில் இயந்திர சில்லில் குறித்த தொழிலாளியின் ஆடை (சுவிட்டர்) சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் வந்தவுடன் சடலம்  கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.