ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பியவரின் பதிவு

241 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ்குமார் ரமேஷ், “தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலால் அவதிப்படுவதாகக் கூறியுள்ளார்.

விபத்துக்குப் பின்னர் விமானத்தின் இடிபாடுகளிலிருந்து அவர் நடந்து செல்லும் காணொளி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது, உயிர் தப்பிய ரமேஷ் அதை ஒரு “அதிசயம்” என்று அழைத்துள்ளார்.

இருப்பினும், ஒரு சில இருக்கைகள் தொலைவிலிருந்த தனது தம்பியை, விபத்தில் இழந்த பின்னர் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக அவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

இந்த நிலை காரணமாக அவரது மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் பேச முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குப் பின்னர் தனது கால், தோள்பட்டை, முழங்கால் மற்றும் முதுகில் வலியால் அவதிப்படுவதாகவும், சோகம் நடந்ததிலிருந்து வேலைக்குச் செல்லவோ அல்லது வாகனம் செலுத்தவோ முடியவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்ததாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.