இந்திய மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

 

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி கிண்ணத்தை சுவீகரித்து.

இது இந்திய மகளிர் அணி வென்ற முதலாவது உலகக்கிண்ணம் ஆகும்.

இந்த நிலையில் உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவிற்கு என்ன ஒரு சிறப்பான தருணம்!. இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் தங்களின் தைரியம் மற்றும் சக்தியால் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர். நீங்கள் பயமின்றி, உறுதியுடன் உலகம் முழுவதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.