பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது தொடர்பில் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .
அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஆராய்ந்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டால், அந்தப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக்காகக் கைத்துப்பாக்கியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர் .
இதேநேரம் துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது என்றும், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகளும் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் .
எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கிக் கோரினால் அதுபற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
