பெரும்போக நெற் செய்கைக்கான தயார்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

 

-கிண்ணியா நிருபர்-

தற்போது பெரும்போக நெற் செய்கைக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வயல் நிலங்களிலும் இதற்காக விவசாயிகள் நிலத்தை சமப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயந்திரத்தை கொண்டு குறித்த விவசாய நிலங்களை சமப்படுத்தி வருகின்றனர்.

தம்பலகாமம்,முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பல விவசாய நிலங்களில் நெற் செய்கை விவசாயத்துக்காக விதைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.