அரச வருமானம் முதல் அரையாண்டில் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்களாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது .

2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,860.6 பில்லியன் ரூபாயாக இருந்த அரச வருமானம், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 24.8% அதிகரித்து 2,321.7 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.

இந்த அரச வருமான உயர்வுக்கு வரி வருமானம் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இதேநேரம் , 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரி வருமானம் 2,151.1 பில்லியன் ரூபாயாக 25.9% அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 1,709.3 பில்லியன் ரூபாயாக உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது .

இந்த வரி வருமான அதிகரிப்புக்கு மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரி வருமானம், பெறுமதி சேர் வரி வருமானம், சுங்க இறக்குமதி வரிகள், வருமான வரி, விசேட வணிகப் பொருள்கள் மீதான வரிகள், சமூகப் பாதுகாப்பு வரிகள், பெற்றோலியப் பொருள்கள் மூலம் கிடைத்த வரிகள், மதுவரி வருமானம், மற்றும் செஸ் வரி போன்ற பல காரணிகள் முக்கியமாகப் பங்களித்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது .