கார் மீது சிறுநீர் கழித்தவரை தட்டிக் கேட்டதால் நேர்ந்த கதி

கனடாவில், சிற்றூந்து மீது சிறுநீர் கழித்ததைக் கண்டித்ததற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடாவின் எட்மண்டன் நகரில், இந்த குற்றச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்திய வம்சாவளியினர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

உணவகம் ஒன்றுக்கு வந்த இந்தியர் ஒருவர் தனது சிற்றூந்தை தரிப்பிடத்தில் நிறுத்தியுள்ளார்.

அதன்போது கனேடியர் ஒருவர் சிற்றூந்தின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இது குறித்து சிற்றூந்தின் உரிமையாளரான இந்தியர் வினவியுள்ளார்.

எனினும் அவரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் குறித்த கனேடியர் சிற்றூந்து உரிமையாளரின் தலையில் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவளை தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.