பொலித்தீன் பைகளுக்கு இன்றிலிருந்து கட்டணம்
பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
நுகர்வோருக்கு வழங்கப்படும் பொலித்தீன் பைகளின் விலையும் இன்று முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலிதீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
